ஆட்டோவும் தமிழ்நாடும்

நான் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறேன்.  தமிழ்நாட்டின் பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் சாலை போக்குவரத்து பிரச்சனைகளில் சிக்கியுள்ளன.  சென்னையைப்பற்றி சொல்லவேவேண்டாம் ஏனென்றால் சென்னை போக்குவரத்து மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. என்னை பொறுத்தவரை நான் எனது அலுவலத்திற்கு நான்கு சக்கர வாகனத்திற்கு பதிலாக இரண்டு பயன்படுத்துகிறேன்.

என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் நான் மிக்கம்கிழ்சியாடைகிறேன்.  முதலில் நான் ஆட்டோவும் நானும் என்ற தலைப்பில் எழுதுகிறேன்.  ஏனென்றால் இந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும்.  ஆட்டோ என்றாலே நமது மக்களுக்கு அலர்ஜியாகிவிட்டது.  

நான் நமது ஆடோக்காரர்களை குறை சொல்லவரவில்லை.  அதேநேரம் ஆட்டோ உரிமையாளர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும், அரசாங்கமும் இதற்கு தீர்வுக்கான வேண்டும்.  நியாயமான கட்டணம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதை எல்லோரும் யோசிக்கவேண்டும்.  இதை நமது சென்னை மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.  அதையும் யாராலும் மறுக்கமுடியாது. 

பொதுவாக ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று அல்லது அதற்குமேலான கட்டணமே கேட்பார்கள்.  கட்டணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அதை அரசாங்கம் நியாயமான முறையில் பொதுமைபடுத்தவேண்டும் இல்லையேல் இது ஒரு தீர்க்கமுடியாத பிரச்னையாகவே தொடரும்.  மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தி அதை செயல்படுத்தவேண்டும்.

கால் டாக்ஸி என்ற நான்கு சக்கர வாகனத்திற்கும், ஆட்டோ கட்டணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.  நாம் எத்தனையோ காரணங்களுக்காக பணத்தை இழக்கிறோம்.  அதில் இந்த காரணமும் ஒன்று அதனால் மக்களுக்கு நடக்கும் அவமானங்களும் அதிகம்.  நான் இதில் மக்களின் பக்கமிருந்தே பார்க்கமுனைகிறேன்.

நாட்டில் எத்தனையோ பிரச்னைகளுக்கு நடுவில் அரசாங்கம் இதையும் சீர்திருத்தவேடும்.  மக்களின் வாழ்க்கை முறையும் பொருளாதாரமும் நாட்டின் முதுகெலும்பு எனவே நாடு முன்னேற இதுமாதிரியான சிறுசிறு பிரச்சனைகளில் இருந்து மக்களை விடுவிப்பதே அரசாங்கத்தின் கடமை.

0 comments