சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.   ஏன் இந்த நிலை என்று யோசித்தால் நாம் பத்து வருடங்களுக்கு முன்பே இதற்கான ஆயத்தபணிகளில் ஈடுபட்டிருக்கவேண்டும்.  ஆனால் நமது அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் அதை பற்றி யோசித்ததாக தெரியவில்லை. நான் யாரையும் குறை சொல்லவில்லை  அதேநேரம் நாம் இன்னமும் விழிபடையவில்லை என்பதே உண்மை.  

இப்போதைய நிலைமைக்கு கோயம்பேடு பேருந்து நிலையமே போதவில்லை.  இப்போதே இரு சக்கர வாகனங்களுக்கு நிறுத்த இடமில்லை. இதுவும் நாம் சரியாய் யோசிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.  அடுத்த பத்தாண்டு திட்டம் ஒன்றை வகுத்து அதற்கேற்ப மாற்று திட்டங்களை யோசிக்கவேண்டும்.  அரசாங்கத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை மக்களின் பாடுதான் திண்டாட்டம்.  

வரும் பத்தாண்டுக்குள் நமது போக்குவரத்து சுமை மும்மடங்காகும்.  அதற்கான சாலை வசதி சரியாக இல்லை அதே நேரம் அரசிடம் மாற்று வழியும் இருப்பதாக தெரியவில்லை.    
மலை ஆறுமணியிலிருந்து இரவு பத்து மணிவரை போக்குவரத்து நெரிசல் கோயம்பேடு சாலையில் அதிகமாகிவிட்டது.   இப்போது கட்டப்பட்டுவரும் மேம்பாலங்கள் போதுமா என்று தெரியவில்லை. மேம்பாலம் செல்லும் வழியிலேயே நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.  இதற்கு மாற்று வழி யோசிக்க வேண்டும்.  

போக்குவரத்து விதிகள் கடுமையாக்கபடவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க இடமில்லை. ஏனென்றால் நம் மக்களே நமது சாலை விதிகளை பின்பற்றுவதில்லை.  நான் சூளையிலிருந்து மண்ணடியில் உள்ள தம்பு தெருவுக்கு செல்ல சென்ட்ரல் வழியாக ராஜாஜி சாலை வந்து பிறகு இந்தியன் வங்கி அருகில் இடது புறம் திரும்பி அந்த தெருவை அடைவேன்.  பின் தம்பு தெருவில் இருந்து சூலை செல்ல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை வழியாக செல்வேன்.  

அனால் நமது மக்கள் சிலர் தம்பு தெருவிற்குள் ஒரு வழி பாதையில் எந்த வித அச்சமும் இல்லாமல் எதிர்திசையில் வருவதி கண்டு கோபம் வரும்.  ஆனால் யாருமே அதை பற்றி யோசிப்பதில்லை.  மக்களின் நலனுக்காக சாலை விதிகளை மதிக்க மக்களுக்கே யோசிக்க நேரமில்லை என்பதே உண்மை.  இதில் யாருக்காவது மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள்.  இவை சில உதாரணங்களே 

சென்னை என்பது லட்ச கணக்கான மக்கள் வாழிடம் ஆகவே விதிகளை நடைமுறைபடுத்துவது சாத்தியமில்லாத ஒன்றா என்பது தெரியவில்லை.  ஆனால் மக்கள் மனம் வைத்தால் எதவும் சாத்தியமே.  தற்போதைய அரசின் மேம்பாலங்கள் கட்டும் பனி மிகவும் பாராட்டுக்குரியவை அதே நேரம் இன்னும் தொலைநோக்குபார்வை வேண்டும் என்பதே என் விருப்பம்.  மக்களின் விருப்பமும் அதுவே. 

0 comments