நான் இன்று இரவு சுமார் ஏழு மணியளவில் நுங்கம்பாக்கதிற்கு சேத்துப்பட்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.  மழை வேறு லேசாக பெய்துகொண்டிருந்தது.  அப்போது என் பின்னால் வந்த ஒரு இரு சக்கர வாகனம் மிக வேகமாக என் அருகில் சென்றது.  அப்போது மழை தேங்கி இருந்ததால் அந்த வாகனம் என் மேல் சேரை வாரி இறைத்து  சென்றது.  சிறிது தூரம் சென்றதும் போக்கு வரத்து நெரிசலால் அந்த வாகனம் மெதுவாக செல்ல நேரிட்டது.   அப்போது அந்து வண்டியின் அருகே சென்ற நான் "ஏம்பா மெதுவாக வண்டி ஓட்டக்கூடாதா இப்படியா கண்மூடி தனமா ஓட்டுவது" என்று கேட்டேன். 

அதே வேகத்தில் அந்த என்னை தாறுமாறாக என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார்.  அவர் உபயோகித்த கெட்ட வார்த்தைகளை நாகரீகம் கருதி இங்கே நான் வெளியிடவில்லை.  "நீ  இங்கிருந்து கை கால் இல்லாமல் தான் போகபோற" இதுதான் அவர் நாகரீகமாக பேசிய வார்த்தை.   நான் மிக மிக பொறுமையாக என் சூழ்நிலையை கையாண்டு அங்கிருந்து கிளம்பினேன் அப்போது அவரது வண்டி என்னை பார்த்தேன் வந்ததே அவருக்கு கோபம்.   திரும்பவும் என்னை அடிக்க வந்து விட்டார் நானும் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

மனிதமும் அதன் மதிப்பும் குறைந்துக்கொண்டே வருவதற்கான ஒரு அறிகுறி இதுவென்றே என்ன தோன்றியது.  நான் கேட்டதற்கு அவர் மன்னிப்பு கோருவது தன சரியான நடைமுறை.   ஆனால் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திய விதம் அவரது ரவுடித்தனத்தை காட்டியது.  அதுவும் இல்லாமல் ஒரு மனிதன் சக மனிதனை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரீகம் அறியாத மனிதர்களை அதுவம் தமிழனைபார்க்க என் மனம் ஒப்பவில்லை. 

உலகமும் அதன் வேகமும் இதையெல்லாம் ஒரு சாதாரண நடவடிக்கையாக பார்க்கலாம்.  ஆனால் மனிதத்தன்மையின் மாற்றங்களினால் ஏற்படும் விளைவு நமது மனித குலைத்தையே சீரழிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன்.  உதாரணமாக புகை பிடிப்பது உடலுக்கு மட்டும் அல்ல உலகத்திற்கும் கேடு என நினைக்கும் எண்ணம் வரவில்லை என்றால் அவன் மனிதனல்ல என்பதன் அதே விளக்கம் இதற்கும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

வண்டி எண் TN 01 AL ௦0205 னை பார்த்தல் அவருக்கு புத்தி சொல்வதற்கு யாருக்காவது தைர்யம் இருந்தால் இங்கே சொல்லுங்கள். 

0 comments