எனது அரசியல் குருவின்(பொன்முடி அவர்கள்) விவேகமும் வேகமும்ம் எனது தந்தை கண்ணன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் விஷயமாக கருதுகிறோம். நான் அவரை முதன் முதலாக 1984ம் ஆண்டு பெரிய செவலை என்ற இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் எனது தந்தையாருடன் சந்தித்தேன். அப்போது அவர் கல்லூரி பேராசிரியராக விழுப்புரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போதே அவரின் அரசியல் ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. நான் அவரது தந்தையிடம் 5ம் வகுப்பு படித்தேன் என்பதும் எனக்கு பெருமை தரும் விஷயம். அவரை பொதுவாக பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டவராக தெரியும். ஆனால் மிக மிக தன்மையானவர் மற்றும் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு திகைப்பூட்டூவார். அவரால் விழுப்புரம் நகரம் அடைந்த பயன் அதிகம்.

Posted by கை.க.சோழன் | 9:21 AM

எனது அரசியல் குருவின்(பொன்முடி அவர்கள்) விவேகமும் வேகமும் கலந்த பேச்சு எப்போதுமே பாராட்டிற்க்கு உரியவை. அவர் தனது மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அவரும் எனது தந்தை கண்ணன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் விஷயமாக கருதுகிறோம்.

நான் அவரை முதன் முதலாக 1984ம் ஆண்டு பெரிய செவலை என்ற இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் எனது தந்தையாருடன் சந்தித்தேன். அப்போது அவர் கல்லூரி பேராசிரியராக விழுப்புரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போதே அவரின் அரசியல் ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. நான் அவரது தந்தையிடம் 5ம் வகுப்பு படித்தேன் என்பதும் எனக்கு பெருமை தரும் விஷயம்.

அவரை பொதுவாக பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டவராக தெரியும்.  ஆனால் மிக மிக தன்மையானவர் மற்றும் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு திகைப்பூட்டூவார்.  அவரால் விழுப்புரம் நகரம் அடைந்த பயன் அதிகம்.

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்....: கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை...

நமது நாட்டின் போக்குவரத்து மிக மிக மோசமானது என்பதற்கு சென்னை ப்ரோட்வயில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையை மிகச் சிறந்த உதாரணமாக சொல்லலாம்.  அவ்வளவு மோசமான சிக்கலான சாலை அதுவும் ரிக்க்ஷா வண்டிகள் நாற்புரமிருந்தும் சாலையை கடக்க முயலும் நிலை இது நமது பூக்கடை காவல் நிலையிதிர்க்கு அருகிலேயே நடக்கிறது. 

அது மட்டுமல்ல, பூக்கடை காவல் நிலையத்திலிருந்து யானை கவுணி வரையிலான என்.எஸ்.சி சாலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை அதில் ரிக்க்ஷா ஓட்டிகள் மிக சாதாரணமாக எதிர் புறம் வருகிறார்கள்.  அதனை கேட்க ஆளில்லை. காவல் துறையினர் அந்த சாலையை பராமரிப்பது போல் தெரியவில்லை.  

உயர்மிகு சென்னை மாநகராட்சி காவல் துறை தலைவர் இதை சரி செய்தல் மிக நன்றாக இருக்கும்.  பொதுவாக என்ன பிரச்சனை ஆனாலும் இந்த தமிழ் ப்ளாக் இடுகையில் பதிவு செய்து தங்கள் பகுதி பிரச்னைகளை சரி செய்ய எனது மின்னஞ்சல் செய்தால் இங்கே அதனை வெளியிடுவோம்.

Email : kdchozhan@gmail.com 

நான் இன்று இரவு சுமார் ஏழு மணியளவில் நுங்கம்பாக்கதிற்கு சேத்துப்பட்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.  மழை வேறு லேசாக பெய்துகொண்டிருந்தது.  அப்போது என் பின்னால் வந்த ஒரு இரு சக்கர வாகனம் மிக வேகமாக என் அருகில் சென்றது.  அப்போது மழை தேங்கி இருந்ததால் அந்த வாகனம் என் மேல் சேரை வாரி இறைத்து  சென்றது.  சிறிது தூரம் சென்றதும் போக்கு வரத்து நெரிசலால் அந்த வாகனம் மெதுவாக செல்ல நேரிட்டது.   அப்போது அந்து வண்டியின் அருகே சென்ற நான் "ஏம்பா மெதுவாக வண்டி ஓட்டக்கூடாதா இப்படியா கண்மூடி தனமா ஓட்டுவது" என்று கேட்டேன். 

அதே வேகத்தில் அந்த என்னை தாறுமாறாக என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார்.  அவர் உபயோகித்த கெட்ட வார்த்தைகளை நாகரீகம் கருதி இங்கே நான் வெளியிடவில்லை.  "நீ  இங்கிருந்து கை கால் இல்லாமல் தான் போகபோற" இதுதான் அவர் நாகரீகமாக பேசிய வார்த்தை.   நான் மிக மிக பொறுமையாக என் சூழ்நிலையை கையாண்டு அங்கிருந்து கிளம்பினேன் அப்போது அவரது வண்டி என்னை பார்த்தேன் வந்ததே அவருக்கு கோபம்.   திரும்பவும் என்னை அடிக்க வந்து விட்டார் நானும் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

மனிதமும் அதன் மதிப்பும் குறைந்துக்கொண்டே வருவதற்கான ஒரு அறிகுறி இதுவென்றே என்ன தோன்றியது.  நான் கேட்டதற்கு அவர் மன்னிப்பு கோருவது தன சரியான நடைமுறை.   ஆனால் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திய விதம் அவரது ரவுடித்தனத்தை காட்டியது.  அதுவும் இல்லாமல் ஒரு மனிதன் சக மனிதனை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரீகம் அறியாத மனிதர்களை அதுவம் தமிழனைபார்க்க என் மனம் ஒப்பவில்லை. 

உலகமும் அதன் வேகமும் இதையெல்லாம் ஒரு சாதாரண நடவடிக்கையாக பார்க்கலாம்.  ஆனால் மனிதத்தன்மையின் மாற்றங்களினால் ஏற்படும் விளைவு நமது மனித குலைத்தையே சீரழிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன்.  உதாரணமாக புகை பிடிப்பது உடலுக்கு மட்டும் அல்ல உலகத்திற்கும் கேடு என நினைக்கும் எண்ணம் வரவில்லை என்றால் அவன் மனிதனல்ல என்பதன் அதே விளக்கம் இதற்கும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

வண்டி எண் TN 01 AL ௦0205 னை பார்த்தல் அவருக்கு புத்தி சொல்வதற்கு யாருக்காவது தைர்யம் இருந்தால் இங்கே சொல்லுங்கள்.